ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் பெரும்பான்மையினர் நீரிழிவு பாதிப்பைக் கொண்டுள்ளனர். அதாவது நீரிழிவு பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நோய்யாகும். இன்று தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவின் காரணமாக, உடல் பருமன், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். இதனை தடுக்க நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிய வெங்காயம் ஒன்றை சேர்த்து கொண்டாலே போதும்.
குறைந்த கார்போஹைட்ரெட்
வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக உள்ளது. அரை கப் நறுக்கிய வெங்காயத்தில் 26 கலோரிகள் மற்றும் 5.9 கிராம் கார்போ சத்து உள்ளது.
அதிக கர்போஹைட்ரெட் எடுத்துக் கொள்வதன் பக்க விளைவு டைப் 2 நீரிழிவு.
வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக இருப்பதால், நீரிழிவு பாதிப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. குறைந்த கார்போ டயட் , உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.
வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக இருப்பதால் இதனை தைரியமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் நீரிழிவு பாதிப்பிற்கு மிகவும் ஏற்றது. நார்சத்து உணவுகள் மிகவும் தாமதமாக உடைக்கப்பட்டு, செரிமானம் ஆவதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீடும் தாமதமாகிறது.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் நீரிழிவு பாதிப்பிற்கு மிகவும் ஏற்றது. நார்சத்து உணவுகள் மிகவும் தாமதமாக உடைக்கப்பட்டு, செரிமானம் ஆவதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீடும் தாமதமாகிறது.
நார்ச்சத்து மிக்க உணவுகள் உங்கள் குடல் பகுதியை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.நீரிழிவில் ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படும் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது. உயர் நார்ச்சத்து உணவுகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது, இதனால் இதய நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.
குறைவான க்ளைகமிக் குறியீடு
ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொண்டவுடன், இரத்த ஓட்டத்தில் அதன் தாக்கத்தை கணக்கிடுவது க்ளைகமிக் குறியீடாகும்.
ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொண்டவுடன், இரத்த ஓட்டத்தில் அதன் தாக்கத்தை கணக்கிடுவது க்ளைகமிக் குறியீடாகும்.
வெங்காயத்தின் க்ளைகமிக் குறியீடு 10 என்பதால், இது நீரிழிவு நோய்க்கு மிகச் சரியான உணவாக கருதப்படுகிறது.55ஐ விட குறைவான க்ளைகமிக் குறியீடு கொண்ட உணவுகள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக சர்க்கரையை வெளியிடுகிறது.
வைட்டமின் மற்றும் கனிமங்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.
மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நியாசின் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது.மெக்னீசியம், ஜின்க், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன


