கடக ராசி குரு பெயர்ச்சி 2019 to 2020

Share:
அன்பார்ந்த கடக ராசி நேயர்களே!
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
தங்களது ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 9 ஆம் இடம் 11 ஆம் இடம் மற்றும் 1ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 9 ஆம் இடம் மேற்படிப்பு மற்றும் அயல் நாட்டுப் பயணத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றுதலைக் குறிக்கும். 1 ஆம் இடம் தேக நலம், மன நலம் மற்றும் வெற்றி தோல்வியைக் குறிக்கும்.
தொழிலும் வியாபராமும்:
இக் காலக் கட்டத்தில் தொழிலில் தங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் உண்டு. உங்களது அனுபவங்களை உடன் பணி புரிவோரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் அவர்களும் பயனுறுவர். வியாபாரத்தில் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சாதுரியமாக கையாளும் பக்குவம் உங்களிடம் இருக்கும். பல வேலைகளை சாதிக்கக் கூடிய திறமைகள் இக் காலக்கட்டத்தில் மெருகேறும்.
பொருளாதாரம்:
பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரத்தில் இக்காலக் கட்டத்தில் கூடுதல் செலவுகளும் தென்படுகின்றது. வரிகளை காலா காலத்தில் செலுத்துவது நல்லது. ஏனென்றால் அபராத கட்டணங்கள் கண்ணுக்கு தென்படுகின்றது. மருத்துவக் காப்பீடுகள் மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.
குடும்பம்:
குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அண்டை அயலார் அனுசரனையாக இருப்பர். வீட்டில் வயதானவர்களின் வழி காட்டுதல்கள் கைகொடுக்கும். சுப விசேஷங்களுக்கு இடமுண்டு.
கல்வி:
உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்வி நிறுவனங்களில் பரிமளிக்க முடியும். தங்களது திறமைகளை வெளிக்காட்ட சரியான சந்தர்ப்பம் உருவாகும்.எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பளிச்சிட முடியும்.
காதலும் திருமணமும்:
இளைஞர்கள் காதல் வலையில் விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உறவில் புரிதல் உண்டு. திருமண வாய்ப்புகள் தெரிகிறது. விட்டுக் கொடுத்தலால் உறவுகள் வலுப்படும். விருப்பங்கள் நிறைவேறக் கூடிய காலம் இது.