தனது குழந்தை மஹி பற்றிய உண்மை-மனம் திறந்த நடிகை ரேவதி!
டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழில் கால்பத்திதவர் நடிகை ரேவதி. ரஜினி, கமல் என 80 களின் முன்னணி நாயகர்கள் அனைவருடன் நடித்து, முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி.
புதுமைப் பெண், மகளிர் மட்டும், மண்வாசனை என அந்த காலத்திலேயே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு படங்களில் நடித்து பாராட்டுக்களையும், பல்வேறு விருதுகளையும் பெற்றவர் இவர்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருந்து வரும் இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரை பற்றியும், இவரது மகள் பற்றியும் பல்வேறு செய்திகள் உலா வரத் தொடங்கின.
கடந்த 1986-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சுரேஷ் மேனனுடன் செய்த திருமணத்தை கருத்து வேறுபாடு காரணமாக முறித்துக் கொண்டார். 2013 ஆம் ஆண்டு சட்டப் படி விவாகாரத்து கிடைத்தது.
இதனை தொடர்ந்து தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் தனக்கென ஒரு துணை வேண்டுமென முடிவு செய்து 5 வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தை பெற்றதோடு அவளுக்கு மஹி எனவும் பெயரிட்டு வளர்த்தும் வருகிறார்.
மஹி எல்லோரைப் போல இயல்பாக வளர்ந்து வருவதாகவும், அவள் ஒன்றும் ஸ்பெஷல் சைல்ட் இல்லை. அவளும் ஒரு சாதாரண குழந்தை தான். எல்லா குழந்தைகளையும் போல் தான் அவளும் வளர்கிறாள் என்றும் கூறினார்.

