அமேசான் காட்டு தீயால் இறுதி அழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் உலகம் !!! அதிர்ச்சியில் உலக நாடுகள் .
அமேசான் காட்டில் எரிந்துவரும் தீயை அணைக்கும் பணியில் 74000 கும் மேட்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். .அமேசான் மலை காடுகளை காப்பாற்ற வேண்டும் என்கின்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒளித்து கொண்டிருக்கிறது.பெயரில் கூட அமேசான் காடுகள் என கூறாமல் அமேசான் மலை காடுகள் என்றே கூறப்படுகின்றது.இங்கு தொடர்ச்சியாக பெய்யும் மழைக்கும் நிலவும் ஈரப்பதமும் தன இந்த பெயருக்கான கரணம்.கோடை காலங்களில் கூட குளிர்ச்சியாக கம்பிரமாக இருக்கும் காடு கடந்த 3 வாரங்களாக தீயில் சிக்கி கருகி வருகின்றது.
பூமியில் நுரையீரல் கொஞ்சம்கொஞ்சமாக அழிந்து வருவத்துக்கு மனிதர்கள் தான் பெரிய காரணம் என அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.அமேசானில் எரியும் தீ மரங்கள் செடிகள் பறவைகள் விலங்கினங்கள் போன்றவற்றுடன் சேர்த்து அங்கு வாழும் பழங்குடிகளை சேர்த்து விழுங்கிவருகிறது.பிரேசிலில் பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளை உள்ளடக்கிய அமேசான் மாகாணத்தில் 420 பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் "முரா" பழங்குடினார்கள்,அந்த பகுதியில் 18000 "முரா" மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரேன்ஜ் மட்டும் சிகப்பு நிறங்களை உடல் முழுவதும்ப பூசிக்கொண்டுஎப்போதும் வில்லுடன் இருப்பதுடன் இவர்களின் அடையாளம்.அமேசான் மலை காடுகளில் எட்டப்பட பெரும் தீ அடர்ந்த வன பகுதியில் உள்ளே வாழும் பழங்குடிகளின் இருப்பிடங்களை விட்டு வைக்க வில்லை,இதனால் அங்கு வாழும் பழங்குடினர் தங்கள் நிலத்தை இழந்து தவித்து வருகின்றார்கள்.யாரையும் நம்பி இருக்காமல் காட்டு தீக்கு எதிராகவும்.இதற்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் தாங்களே காலத்தில் இறங்கி போராட தயாராகி விட்டனர் "முரா" மக்கள்.
இங்குள்ள அணைத்து மரங்களுக்கும் செடி கொடிகளுக்கு உயிர் உள்ளது , அவை அனைத்தும் வாழவேண்டும் அதுவும் அவை சொந்த இடத்திலேயே வாழ வேண்டும்.எங்களை பொறுத்த வரை இது மிக பெரிய அழிவு.எங்களுக்கு எதிராக செய்யப்படும் பெரும் கொடுமை,எங்கள் இறுதி துளி இரத்ததை கொடுத்தாவது எங்கள் காட்டை காப்பாத்துவோம் என பழங்குடி மக்களின் தலைவர் "ராய்முடோ முரா" ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்."வகனா" முறை என்ற மற்றும் ஒரு பழங்குடிகளின் தலைவர் பேசும் போது அமேசான் காடுகளின் அழிவு அனுதினமும் நாங்கள் கண்கூடாக பார்த்துவருகின்றோம்.ஒவொரு நிமிடமும் இந்த காடு தனது இறுதி நாளை சென்று கொண்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
காலநிலை மாற்றத்தை எங்களால் உணர முடிகிறது.இந்த உலகத்திற்கு காடுகள் தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு காடுகள் தேவை.எங்கள் எதிர் சந்ததியனர்களுக்கு காடுகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 15 முதல் தற்போதுவரை அமேசான் காடுகளில் 9500 புதிய காட்டு தீ சம்பவங்கள் நடந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அங்கு எறியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத பிரேசில் அரசு சர்வதேச நாடுகளின் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது.அமேசானில் 3 கால்பந்தாட்ட ஆடுகள நில பரப்பு ஒவ்வொரு நொடியும் அழிந்து வருவதாக நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.





