மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று நிறுவப்பட்டது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இதன் பின்னர் இந்தியத் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியை சிறப்பிக்கும் வகையில் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகம் அவரது மெழுகு சிலையை சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்க வடிவமைத்துள்ளது . இதனை இன்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் திறந்து வைத்தார். அவருடன் ஸ்ரீதேவியின் மகள்களும் இருந்தனர்.
