இந்தியாவின் தோல்வியல்ல இதுவே வெற்றியின் !படிக்கட்டிகள்

Share:

பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன் வெறும் 2.1 ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போதுதான் தொலைத்தொடர்பு விட்டுப்போயிருக்கிறது..

விக்ரம் சென்ற பகுதி, கோடிக்கணக்கான ஆண்டுகள் சூரியனின் ஒளி படாத மர்மப்பகுதி, எந்த நாடும் இதுவரை அங்கே  கொடி நாட்டியதில்லை.. நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிவிட்டார்கள் போல..

அப்படிப்பட்ட மர்மமான நிலவுப்பகுதியில்தான் சந்திராயன்-2வின் விக்ரம் லேண்டர், 2.1 கிலோ மீட்டர் வரை நெருங்கியுள்ளது. அதாவது ஊட்டி டூ மேட்டுப்பா ளையம் இடையிலான உயரம். இவ்வளவு அருகில் நெருங்கியிருக்கிறோம் என்றால் அதுவே மிகப்பெரிய சாதனை..

அங்கே ஏன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பதை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து மறுபடியும் சாதிக்கத்தான் போகிறார்கள்..

ஏனெனில் லேண்ட்டிங் மேட்டரில்தான் நாம் சிக்கலில் மாட்டியிருக்கிறோமே தவிர, சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றியபடியே நன்றாகத்தான் உள்ளது.ஒரு வருடத்திற்கு அது சுற்றியபடியே பல ஆராய்ச்சிகளை செய்யத்தான் போகிறது.

சாதாரண முயற்சியில் நமது விஞ்ஞானிகள் பின்ன டைவை சந்திக்கவில்லை, மாபெரும் சாதனை முயற்சியில்தான் இதனை சந்தித்துள்ளனர்....வாழ்த்துக்கள் சார்....