திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் கடந்த வெள்ளியன்று மாலை 5.40க்கு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில் ஆழ்துணை கிணற்றில் விழுந்துள்ளான்.
பின்பு 80 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தமிழகத்தினையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை 8.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுர்ஜத்தின் தாய் உன்னை கட்டிப்பிடித்து அழக்கூட நாதியில்லாம போச்சுடா என்று அழுதுள்ளது அனைவரின் இதயத்தினை நொறுக்கிப் போட்டுள்ளது.
குழிக்குள் இருக்கையில்குழந்தையின் கையினை இரண்டு நாட்களாக 88 அடியிலிருந்து கீழே சென்று விடக்கூடாது என்பதற்காக ஏர் லாக் மூலம் பிடித்து வைத்திருந்தனர்.
தற்போது மீட்புப்படையினர் குழந்தையின் உடல் எவ்வாறு இருந்தது என்பதும் குழந்தையின் உடற்கூறு ஆய்வு ரிப்போர்ட்டில் என்ன வந்துள்ளது என்பது வெளியாகியுள்ளது.
குழந்தையினை யாரிடமும் காட்டாமல் எடுத்து வந்த மீட்பு படையினர், குழந்தையின் முகத்தில் காயம் எதுவும் இல்லை என்றும், குழந்தையின் கீழ் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளியாட்கள் யாருக்கும் காட்டாமல், மருத்துவமனையில் வைத்து சுர்ஜித் உடலை அவரின் பெற்றோர்களுக்கு மட்டும் காட்டியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை சுர்ஜித் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு கையில் கயிறு கட்டப்பட்டுள்ளதால் உடைந்து காணப்பட்டதாகவும், குழந்தையின் சில பாகங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை எப்பொழுது இறந்தது என்ற விபரத்தினை மருத்துவர்கள் வெளியிடவில்லையாம்.
