உடலில் நீர் சத்து அதிகரிக்க !

Share:


நாம் பெரும்பாலும் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.மோர் குடித்தால் மட்டுமே போதுமானது...

அதுதான் சிறந்ததும் கூட. ஆனால் ஒரு சிலர் அல்லது பலர் தாகம் எடுத்தவுடன் கேஸ் நிறைந்த பொருளான குளிர்பானங்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

அதனால் நம் உடலில் உண்டாகும் விளைவுகள் என்னவென்று தெரிந்தாலும் கூட அவற்றின் ருசிக்காகவே பெரிதும் விரும்பி குடிக்கிறார்கள். ஆனால் அதை இன்றோடு விட்டுவிடுவது மிகவும் நல்லது.

ஏனென்றால் நம்முடைய உணவு பழக்கங்களும் நாகரீக வளர்ச்சியால் மாறி வருகிறது. அவ்வாறு இருக்கும் போது நம் உடலில் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து தான் காணப்படுகிறது.

இது போன்ற கேஸ் நிறைந்த குளிர்பானங்களை பயன்படுத்தி வருவதன் மூலம் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

நாம் தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் அருந்துவது நல்ல தீர்வு. ஆனால் நம்முடைய முன்னோர்கள் பெரும்பாலும் தண்ணீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தி வந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்வது #இன்றியமையாத தேவையாக தற்போது உள்ளது.

#மோரில் உள்ள மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொண்டால் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக மோரை இனிமேல் தாகம் எடுக்கும் பொழுது கண்டிப்பாக குடிப்போம்.

உடலில் நீர் சத்து அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வரலாம். அவ்வாறு குடிப்பதால் #எலக்ட்ரோலைட் மற்றும் நீர் சத்து நம் உடலில் அதிகரித்து உடல் வறட்சி, முக வறட்சி, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீர்வது உடலில் செரிமான கோளாறுகள் நீங்கி உடல் வலிமை பெறுகிறது.

உடலில் நீர்சத்து தான் மிகவும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. அது நமக்கு கோடைகாலங்களில் மட்டும்தான் மிகத் தெளிவாக புரியும்.

நீர் சத்து உடலில் குறைவதால் தான் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வாயுக்கோளாறு, ஜீரண கோளாறு, முகப்பருக்கள் உண்டாதல், தலைவலி, உடல் சோர்வு, மன அழுத்தம் அதிகரித்தல் போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் வருகிறது.

இவற்றை நாம் தொடர்ந்து மோர் குடித்து வருவதன் மூலம் உடலில் நீர் சத்து அதிகரித்தது உடல் பலம் பெற அரும் பங்கு வகிக்கிறது.

உடல் எடையை குறைக்க இது பெரும் பங்கு வகிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும் மிக எளிதாக ஜீரணம் அடைந்து விடுகிறது. நமக்கு இருக்கும் பெரிய உடல் உபாதைகள் உண்டாக காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மட்டுமே.

அவ்வாறு ஜீரணம் ஆகி விட்டால் உடலில் அவை சத்துக்களாக மாறி நம் உடல் வலிமை பெற உதவுகிறது. ஜீரணம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில் அந்த உணவே நம்முடைய #எதிரியாக மாறுகிறது.

உடலில் வாயுக்கோளாறு, மலச்சிக்கல், அஜீரண பிரச்சனை ஏற்பட்டு உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற பல்வேறுவிதமான உடல் உபாதைகளுக்கு அவை இட்டுச் செல்கிறது.

உடலில் ஜீரண சக்தியை அதிகரித்தால் போதும். நம் உடலில் எந்த ஒரு நோய்களும் அண்டாது என்பது தான் உண்மை.

எனவே மோர் அருந்துவதால் கிடைக்கும் நன்மையை பற்றி தெரிந்துகொண்டு அவற்றை நம்முடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்து சொல்வது இன்றைய தலையாய கடமை.

எனவே அனைவரும் ஆரோக்கியமாக உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மோரை உணவில் தவிர்க்காமல் இருப்பதுதான் நல்லது.

#தாகம் #தண்ணீர் #மோர் #எலக்ட்ரோலைட் #நீர்ச்சத்து #அஜீரண_கோளாறு #Thirsty #water #water_content #buttermilk