நெஞ்செரிவு , மலச்சிக்கல், மூட்டுவலி, பாத வலி, மூக்கடைப்பு போன்ற பல்வேறு உடல் உபாதைகளை இந்த சுடுநீர் தீர்த்து வைக்கின்றது.ஏதாவது ஸ்வீட், அல்லது எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட்டதும் சிலருக்கு நெஞ்செரிச்சல் வந்துவிடும் அவ் வேளையில் கொஞ்சம் சுடுநீரை வெதவெதப்பாக எடுத்து மெதுவாக அருந்துங்கள் சில நிமிடங்களில் நெஞ்செரிச்சல் பறந்தே போய்விடும்.
காலையில் எழுந்ததும் மலம் கழிப்பதில் சிக்கலா சற்று வெந்நீர் அருந்திப் பாருங்கள் ஈஸியா உங்க வேலையை முடிச்சிடலாம். அத்தோடு இந்த வெந்நீர் உடலில் சேரும் அதிகப்படியான சதையையும் கரைத்து விடுவதாகவும் சொல்கின்றார்கள்.பயணம் போய்வந்ததும் உங்கள் பாதங்களில் வலி ஏற்படுகின்றதா.!
அதுக்கும் வெந்நீர் தானுங்க தீர்வு சற்று பாதம் பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் எடுத்து அதில் சிறிது உப்புக் கல்லைப் போட்டு வைத்து அதிலே சிறிது நேரத்திற்கு உங்கள் கபதத்தை வைத்திருங்கள் பப்புறம் பாருங்கள் இதன் பயனை..மூக்கடைப்பு நேரத்தில் கொஞ்சம் விக்கிஸ் எடுத்து வெந்நீரில் இட்டு முகத்தை அதில் காட்டுங்க . மூக்கடைப்பு இருந்த இடம் தெரியாத பறந்தே போயிடும். அதுபோல ஜலதோஷ காலத்துலயும் அடிக்கடி வெந்நீர் அருந்திட்டு வந்தீங்கன்னாக்க ஜலதோஷம் விரைவிலேயே குணமாகி விடுமுங்க..
