இந்த உணவுகள் சாப்பிடும் போது அவதானமாக இருங்கள்.. இல்லாவிட்டால் ஆபத்து

Share:

மீனில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், அமினோ அமிலம், விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. ஆனால் இந்த மீனை பாலுடன் எடுத்தக் கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது இரத்தம் கெட்டுப் போய் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான இரத்த ஓட்டம் பாதிப்படையும்.
அதே போல் பாலுடன் வாழைப் பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது. 

இதனால் உடலில் சளி அதிகமாகும்.
தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால் அது அசௌகரியம் தருவதோடு வாயுத் தொல்லையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிக புரதம் இருப்பதால் இரண்டையும் ஒன்றாக  எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.

பப்பாளிப் பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காதீர்கள். அது செரிமானப் பிரச்சினையை ஏற்படுத்தும்.
கோழி இறைச்சி மற்றும் மீன் இரண்டையும் பால் மற்றும் எள்ளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால் உடலின் நுண்ணிய துளைகள் கெட்டு  உடல் நலக் கெடுதல் உண்டாகலாம்.