உங்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனையா.?

Share:

அடிக்கடி தலை சுற்றல், சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குது போன்றவை ஹீமோகுளோபின் குறைப்பாடாக இருக்கலாம். இவற்றுக்கான தீர்வினை இன்று பார்க்கப் போகின்றோம். இது சாதாரணமாக தெரிந்தாலும் இரத்தம் ஏற்றும் நிலைக்கு தள்ளப் பட்டுவிடுகிறோம். 

தற்போது ஹீமோகுளோபின் பிரச்சன்சியை இலகுவாக தீர்க்கும் சில முறைகளை பார்க்கலாம்.

தினமும் காலையில் இரண்டு பேரீச்சை பழங்களை சாப்பிட்டு வாருங்கள் இது ஹீமோகுளோபின் பிரச்சனையை வேகமாக குணப்படுத்துகிறது. முளைக்கட்டிய தானிய வகைகள் வாரம் இரண்டு முறை சாப்பிடுங்கள். உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்ளுங்கள் இதுவும் ஹீமோகுளோபினை வேகமாக அதிகரிக்கிறது.

அடுத்து காய்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிடுங்கள் இதுவும் உங்களின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதுளை பழம் கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடுங்கள் இது ஹீமோகுளோபின் அளவை வேகமாக அதிகரிக்கிறது.

முருங்கை கீரை இதைவிட ஒரு மருந்தை நிச்சயம் யாராலும் தேட முடியாது. முருங்கை கீரை கிடைத்தால் உணவில் தினமும் முடிந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் இது அனைத்து நோய்களுக்கும் நல்லது. நாட்டு கருப்பட்டி சாப்பிட்டாலும் உங்கள் தலை சுற்றல் பிரச்சனை தீரும் என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!