முள்ளங்கியிண் மருத்துவக் குணங்கள்!!

Share:


உணவே மருந்து' என்பது பழமொழி. ஆனால் நம்மில் பலருக்கும் இப்போது, மருந்தே உணவு என்ற நிலை வந்து விட்டது. இந்த நிலைக்கு காரணம், நமது உணவில் போதிய அளவிலான காய்கறிகளை நாம் பயன்படுத்தாதது தான்.

நாம் நம் அன்றாட உணவில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் மருந்தை உணவாக எடுத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது. அந்த வகையில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய, தாதுக்களும் விட்டமின்களும் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கி. 

#கிழங்கு வகையை சார்த்த முள்ளங்கியானது பொதுவாக இரண்டு நிறங்களில் காணப்படுகின்றன. அவை, சிவப்பு நிற முள்ளங்கி மற்றும் வெள்ளை நிற முள்ளங்கி. இவற்றில், வெள்ளை நிற முள்ளங்கியானது #மருந்தாகவும் உணவாகவும்  பயன்படுகிறது.

அதே போல சிவப்பு நிற முள்ளங்கியில் அதன் இலை,விதை, கிழங்கு என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை.

முள்ளங்கியில் #கந்தகசத்து நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் முள்ளங்கி ஒருவித காரத்தன்மையுடன் இருக்கிறது.முள்ளங்கியில் ஒருவிதமான நெடி ஏற்படுவதற்கும் இதிலுள்ள #கந்தகச்சத்தே காரணமாகிறது.

மேலும் முள்ளங்கியில் இருக்கக்கூடிய கந்தக மூலக்கூறுகள் தான் அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாக உள்ளன.

இதயத்திற்கு:

இன்றைய காலசூழ்நிலையில் இதய பிரச்சனை கொண்டவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக #இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனைத் தவிர்க்க தினந்தோறும் நம் உணவில் முள்ளங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயத்தசைகள் வலிமை பெறுகின்றது.மேலும், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

#சுவாசக்கோளாறுகளை நீக்க :

தற்காலங்களில் வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர காரணங்களால் காற்றில் மாசுபாடு அதிகரித்து வருகின்றது. இந்த மாசுபட்டை காற்றை நாம் சுவாசிப்பதால் நம் கண்களுக்கு புலப்படாத பல நுண்கிருமிகளும் மாசுகளும் நமது நுரையீரலை சென்றடையும்.

நுரையீரலில் இவ்வாறு மாசுக்கள் சேர்வதை தடுக்க முள்ளங்கி சாப்பிட்டு வரலாம். இதனால் நுரையீரல் சுத்தமாகும் மற்றும் சுவாச பிரச்சனைகளும் நம்மை நெருங்காது.

#சிறுநீரக கற்கள்:

 உடலுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் அது சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். தண்ணீர் அதிகம் அருந்தாவிட்டால் சிறுநீரத்தில் கற்கள் உருவாகும். இதனை தவிர்க்க முள்ளங்கி ஜூஸ் தினம் அருந்தி வரலாம்.இதனால் #சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீரகத்தின் நலன் பேணப்படும்.

#உடல் சூட்டை தணிக்கும் :

கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் உடல் சூட்டை தவிர்ப்பதில் முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. முள்ளங்கியானது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் சூட்டை தணிக்கும் திறன் கொண்டது.

#நீரிழிவு உள்ளவர்களுக்கு :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு முள்ளங்கி ஒரு மிக சிறந்த வரப்பிரசாதம். ஏனெனில் முள்ளங்கியானது இரத்தத்தில் இருக்கக்கூடிய #குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முள்ளங்கியை தாராளமாக சாப்பிடலாம். 

#உடல் எடையை குறைக்க :

அதிக உடல் எடை கொண்டவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க விரும்பினால் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தினமும் முள்ளங்கி ஜுஸ் பருகி வரலாம்.இதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.