காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட பல பலூன்கள்

Share:

 இஸ்ரேலின் மீது தீமூட்டும்  பலூன்களை ஏவியது ஹமாஸ்


ஹமாசின் பகுதியிலிருந்து தீ மூட்டும் பலூன்கள் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட பல பலூன்கள் காரணமாக இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ பரவியது என இஸ்ரேலின் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை ஹாசாவில் உள்ள ஹமாஸின் இலக்கினை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் நகரத்தின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு;ள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸாவிலிருந்து தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக மீண்டும் யுத்தம் உட்பட எதற்கும் தயார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியிலிருந்து செலுத்தப்பட்ட தீப்பிடிக்கும் பலூன்கள் காரணமாக 20 இடங்களில் தீப்பிடித்தது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.