பிரித்தானியா இளவரசர் ஹறிக்கு பிறந்த ரெண்டாவது குழந்தையால் ஏட்பட்ட அதிஷ்டம்!

Share:

 


பிரித்தானிய இளவரசர் ஹரிக்குு  இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தை பிறந்த நேரம் அவருக்கு நல்ல நேரமாகவே அமைந்துள்ளது போலத் தோன்றுகிறது

ஆம், ஹரி, தனது தாயாகிய இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவுக்காக அடுத்த மாதம் பிரித்தானியா வர உள்ள நிலையில், அவரை தன்னுடன் மதிய உணவருந்த வருமாறு அழைத்துள்ளாராம் மகாராணியார்.

இளவரசர் ஹரியும், அவரது மனைவியான மேகனும், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மகாராணியாரின் குடும்பம் இனரீதியாக தங்களை விமர்சித்ததாகக் கூட ஹரி மேகன் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



ஆனாலும் கூட மகாராணியாருக்கு பேரன் ஹரி மீது கொஞ்சமும் கோபமில்லை போலிருக்கிறது. ஆம், தனது தாயின் சிலை திறப்பு விழாவிற்காக பிரித்தானியா வரும் ஹரியை தன்னுடன் உணவருந்த வருமாறு மகாராணியார் அழைப்பு விடுத்துள்ளார் என அரண்மனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது மகாராணியாரின் சிறப்பு குணமான பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று கூறியுள்ள அந்த அலுவலர், அந்த மதிய உணவின்போது பாட்டியும் பேரனும் மனம் விட்டு பேசிக்கொள்ள அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்கிறார்.

அதே நேரத்தில், மேகன் பிரித்தானியாவுக்கு வரமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தன் மகன் ஆர்ச்சி மற்றும் மகள் லிலிபெட்டுடன் அமெரிக்காவிலேயே இருந்துவிடுவார் என கருதப்படுகிறது.