அசல் வல்லாரை போல் காணப்படும் நஞ்சு கீரைவகை! ஏமாந்துவிடாதீர்கள்!

Share:


 வல்லாரைச் செடி என்ற பெயரில் கிட்டதட்ட முக்கால்வாசி நாற்றங்கால்களில் விற்கப்படுவது, வல்லாரையே அல்ல☘🍀

👉👉சந்தைகளில், கீரைக் கடைகளில் விற்கப்படுவது Hydrocotyle umbellata எனும் களைச்செடி.

பார்ப்பதற்கு வல்லாரை மாதிரி தெரியும் ஆனால் வழுவழுவென்ற இலை வளைத்தால் உடைந்துவிடும். 

(வல்லாரை இலை வளைத்தால் ஒடியாது)

இந்த களைச் செடி மிக வேகமாக வளரக்கூடியது என்பதால் இலைகளை சின்னசின்ன கட்டுகளாகக் கட்டி கோவில்கள் முன்னால் கூட வல்லாரை என்று தவறாக விற்க ஆரம்பித்துவிட்டார்கள். 

"மெமரி பவர் இன்கிரீஸ் ஆகும், ஒரு லீஃபை ச்சியூ பண்ணுங்க, கமான்" என்று மூன்றாம், நான்காம் வகுப்பு குழந்தைகளுக்கு நவயுக பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். 

இது வல்லாரை மாதிரியே இல்லையே என்றால்

சீமை வல்லாரை, 

மலை வல்லாரை, 

காட்டு வல்லாரை,

ஹைபிரிட் வல்லாரை என்று காதில் பூ சுற்றுகிறார்கள். 

இதில் கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு இது தவறான செடி என்றே தெரிவதில்லை. 

*அவர்களை யாரோ நம்ப வைத்திருக்கிறார்கள், அதை அப்படியே அவர்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள்."*

புதுப் பணக்காரர்கள் அமைக்கும் மூலிகைப் பண்ணை, 

சித்தர் குடில், 

நட்சத்திரத் தோட்டம்,

அசோக வனம் என எல்லா இடங்களிலும் இந்த போலி வல்லாரைதான் இருக்கிறது. 

ஆனாலும் தமிழ்நாட்டுக்கு வல்லாரையைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இப்படி ஒரு ஞாபகமறதி வந்திருக்கக்கூடாது. 

சரியான சிற்றினம் (species) எதுவென்றே தெரியாமல் பலர் ஆராய்ச்சி செய்து thesis வைத்த கூத்துகளெல்லாம் நிறைய உண்டு. 

ஆனால் செம்மறி ஆட்டுக்கும், வெள்ளாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரிதான் வல்லாரை வியாபாரம் நடக்கிறது. 

இ ந்த இலட்சணத்தில் இதை பிரமி என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல்.

சமஸ்கிருதமோ, கிரேக்கமோ, சுவாகிலியோ - 

சரியான செடியை அடையாளங்காணத் தெரியவேண்டும், 

இல்லாவிட்டால் பக்க விளைவுகள் முற்றிய பின் ICU-வுக்குத்தான் ஓட வேண்டும்.